ஆப்நகரம்

அடுத்தகட்ட பணிநீக்கத்திற்கு ரெடியாகும் கூகுள்.. சூசகமாக சொன்ன சுந்தர்பிச்சை!

கூகுள் நிறுவனம் ஜனவரி மாதம் அதன் 12,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதையடுத்து அதன் அடுத்த பணிநீக்கங்களை செய்யும் என ஆதாரங்கள் கூறுகின்றன.

Samayam Tamil 13 Apr 2023, 6:53 pm
ஜனவரியில் மொத்த பணியாளர்களில் 6 சதவீதம் அதாவது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்னர், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இரண்டாம் கட்ட பணிநீக்கங்களுக்கு தயாராக இருக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Google layoff


வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியின் கூகிளின் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட் பார்ட், ஜிமெயில் மற்றும் கூகுள் டாக்ஸ் மற்றும் பிற திட்டங்களில் புதிய பணியிட திறன்கள் பற்றி பிச்சை பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே உலகின் முன்னணி நிறுவனங்களும் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவை சார்ந்த ஊழியர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் பலரும் கூட இந்த பணிநீக்கத்தில் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தை சேர்ந்த 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மேலும் பணிநீக்கம் செய்ய முக்கிய காரணம் பொருளாதார மந்தநிலையால், நிறுவனம் நிதியளவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பணிநீக்கம் செய்யப்போவதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது AI உதவிகளுடன் நிறுவனங்கள் இயங்கினால் பல மணிநேரம் வேலைகள் முன்னதாகவே முடிக்க முடியும், மேலும் பல பணியாளர்கள் செய்யும் வேலையை எளிதாக முடிக்கும் என்பதால் கூகுள் நிறுவனம் பணியாளர்களை நீக்க அதிக வாய்ப்புள்ளதால், பணியாளர்கள் நீக்கம் இருக்கலாம்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்