ஆப்நகரம்

பணம் மட்டும் முக்கியமில்லை.. சுந்தர் பிச்சையால் கடுப்பான கூகுள் ஊழியர்கள்!

பணம் மட்டும் முக்கியமில்லை எனவும், வேலையில் மகிழ்ச்சியை தேட வேண்டும் எனவும் கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அட்வைஸ்.

Samayam Tamil 27 Sep 2022, 11:51 am
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சூழலில் ஏற்கெனவே பல்வேறு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் குறைத்துள்ளன.
Samayam Tamil sundar pichai


இதுபோக, செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கான சலுகைகளையும் குறைத்து வருகின்றன. இவ்வகையில், கூகுள் (Google) நிறுவனமும் தனது ஊழியர்களுக்கான சலுகைகளை குறைத்து வருகிறது. குறிப்பாக, ஊழியர்களுக்கான பயணம் மற்றும் பொழுதுபோக்கு செலவுகளை கூகுள் குறைத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற மீட்டிங்கில், செலவுகள் குறைப்பு குறித்து கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சையிடம் ஊழியர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அப்போது, சலுகைகளும், செலவுகளும் ஏன் குறைக்கப்படுவதாக சுந்தர் பிச்சையிடம் ஊழியர்கள் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வந்தாச்சு சாம்சங் கிரெடிட் கார்டு.. கேஷ்பேக் பிரியர்களுக்கு வரப்பிரசாதம்!
அதற்கு, வேலையில் மகிழ்ச்சியை தேடுவதே முக்கியம் எனவும், பணமும் சலுகைகளும் மட்டும் எல்லாம் இல்லை எனவும் ஊழியர்களிடம் சுந்தர் பிச்சை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்திடம் நல்ல லாபமும், நிறைய பணமும் இருக்கும் சூழலில் செலவுகள் ஏன் குறைக்கப்படுகிறது என ஊழியர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதற்கு, கடினமான பொருளாதார சூழ்நிலைகளில் ஒரு நிறுவனமாக ஊழியர்கள் அனைவரும் இதை கடக்க வேண்டும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சையின் பதில் கூகுள் ஊழியர்களை டென்ஷன் அடையச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்