ஆப்நகரம்

ஊழியர்களுக்கு 20 நாள் விடுமுறை: கூகுள் அதிரடி அறிவிப்பு!

ஒரு ஆண்டில் 20 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Jan 2022, 12:53 pm
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள் இருக்கும் சூழலில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களில் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சலுகைகளை கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதேபோல, விடுமுறைச் சலுகை, ஊக்கத்தொகை போன்ற சில சலுகைகளும் ஊழியர்களுக்குக் கிடைக்கிறது. இதுபோல, ஊழியர் நலன் சார்ந்த விஷயங்களில் கூகுள் நிறுவனம் எப்போதுமே ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
Samayam Tamil google


இதுபோன்ற சூழலில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கான ஊதிய விடுப்பு தினங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. புதிய அறிவிப்பின்படி இனி ஊழியர்கள் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 20 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
குழந்தை பிறந்தவுடன் அதைக் கவனித்துக்கொள்ளவும், வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடம் மற்ற தேவைகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் உதவும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான ஃபியோனா கிகோனி தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், புதிதாகக் குழந்தை பிறந்த பெற்றோர்கள் 24 நாட்கள் வரை விடுப்பு எடுக்கும் வசதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 18 நாட்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டது. இதுபோன்ற நிறைய சலுகைகளை கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்