ஆப்நகரம்

கூகுள் பே ஆப்பில் பணம் அனுப்பினால் கட்டணமா?

கூகுள் பே ஆப் மூலமாகப் பணம் அனுப்பினால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவிய செய்திக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 25 Nov 2020, 3:52 pm
இந்தியாவில் பெரும்பாலானோர் இப்போது பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற சேவைகளுக்கு மொபைல் செயலிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் குறிப்பாக கூகுள் பே செயலி அதிகப் பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த கூகுள் பே செயலி மூலமாக இனி நீங்கள் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அண்மையில் செய்தி வெளியானது. ஜனவரி மாதம் முதல் இணைய செயலி சேவை ரத்து செய்யப்படுவதாகவும், மொபைல் ஆப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல் பரவியது.
Samayam Tamil pay


ஆனால் இத்தகவலை கூகுள் பே நிறுவனம் மறுத்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள பயனாளர்கள் யாருக்கும் கூகுள் பே மூலமாகப் பணம் அனுப்பினால் வழக்கம்போல கட்டணம் எதுவும் கிடையாது என்று கூகுள் பே நிறுவனம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், அது இந்தியாவில் என்று தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும் கூகுள் பே நிறுவனம் கூறியுள்ளது. சென்ற வாரம் இந்நிறுவனம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், புதிய வடிவில் கூகுள் பே அறிமுகம் செய்யப்படும் என்று கூறியிருந்தது.

பிஎஃப் பணத்தை எடுத்தால் ஆபத்து... ஏன் தெரியுமா?

புதிய வடிவிலான கூகுள் பே செயலியானதும் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. அது பயன்பாட்டுக்கு வந்த பிறகு கூகுள் பே வசதியை ஆன்லைன் தளத்தில் பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் தளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதேபோல, உடனடிப் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறியிருந்தது. இந்த அறிவிப்பானது அமெரிக்காவில் கூகுள் பே பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே எனவும், இந்தியாவில் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் கூகுள் பே இப்போது தெளிவுபடுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்