ஆப்நகரம்

கூகுளின் அசத்தல் திட்டம்!.. அலுவலகங்கள், தரவு மையங்களில் 9.5 பில்லியன் டாலர் முதலீடு;

இந்த ஆண்டு இறுதிக்குள் கூகுளின் முதலீட்டில் மூலம் குறைந்தது 12,000 புதிய முழுநேர வேலைவாய்ப்பை வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Apr 2022, 4:53 pm
கூகுள் நிறுவனம் புதிய கிளைகளைத் திறந்து, வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதால், 2021ல் 7 பில்லியன் டாலரில் இருந்து, இந்த ஆண்டு முதல் அமெரிக்காவில் அலுவலகங்கள் மற்றும் தரவு மையங்களில் 9.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil google


பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முதலீடு இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 12,000 புதிய முழுநேர வேலைகளை உருவாக்கும் என கடந்த புதன்கிழமை கூகுள் கூறியுள்ளது. அட்லாண்டாவில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறக்கவும், நியூயார்க்கில் அதன் இருப்பை அதிகரிக்கவும், போல்டர், கோலோவில் அதன் வளாகத்தை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள தரவு மையங்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

அதேபோல், இந்த முதலீடுகள் மூலம் சிறந்த தயாரிப்புகள், ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வலுவான சமூகங்களை உருவாக்கும் என கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.கடந்த ஐந்து ஆண்டுகளில், கூகுள் 26 மாநிலங்களில் உள்ள அலுவலகங்கள் மற்றும் தரவு மையங்களில் 37 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.

மார்ச் 2021 இல், கூகுள் தனது சொந்த மாநிலமான கலிபோர்னியாவில் 1 பில்லியன் டாலர் செலுத்துவது உட்பட, அமெரிக்க அலுவலகங்கள் மற்றும் தரவு மையங்களின் தடத்தை விரிவுபடுத்த, ஆண்டு முழுவதும் 7 பில்லியன் டாலரை செலவழிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்