ஆப்நகரம்

மாற்றுப் பாதையில் செல்லுங்கள்: கார் நிறுவனங்களிடம் அரசு கோரிக்கை!

இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு விரைந்து மாறவேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Samayam Tamil 27 Nov 2019, 6:22 pm
உள்நாட்டில் எரிபொருள் பயன்பாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை இன்றியமையாதவையாக இருக்கின்றன. இவற்றுக்கு மூலாதாரமாக உள்ள கச்சா எண்ணெய் உள்நாட்டில் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படாததால் அதிக விலை கொடுத்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil மாற்றுப் பாதையில் செல்லுங்கள்_ கார் நிறுவனங்களிடம் அரசு கோரிக்கை


முதற்கட்டமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் அரசு இறங்கியது. அதோடு, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் திட்டத்தை அரசு கையிலெடுத்தது. இதனால் சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் குறைக்க முடியும் என்பதால் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது.


பெண்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி இருக்கு தெரியுமா?

டெல்லியில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற நூஜென் மொபிலிட்டி மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி கலந்துகொண்டார். அங்கு அவர் பேசுகையில், “பெட்ரோலியப் பொருட்களை விடுத்து மாற்று எரிவாயுப் பயன்பாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரவேண்டும். இப்பயணத்தில் ஆட்டோமொபைல் துறைக்கு அரசின் ஆதரவு கட்டாயம் இருக்கும்” என்று உறுதியளித்தார்.

எஃகு உற்பத்தியில் முக்கும் இந்தியா!

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கச்சா எண்ணெய்க்கு அதிகம் செலவிடுவது பின்னடைவாகவும் சவாலாகவும் இருக்கிறது எனவும், இதற்கான தீர்வு காண இதுவே சரியான நேரம் எனவும் நிதின் கட்கரி கூறினார். ஆட்டோமொபைல் துறை அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, அரசுக்கு நல்ல வருமானம் தரும் துறையாக இருப்பதாகவும் நிதின் கட்கரி புகழாரம் சூட்டினார். பெட்ரோலியப் பொருட்களில் மெத்தனால் கலப்பு குறித்த முக்கியத்துவம் குறித்தும் நிதின் கட்கரி விளக்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்