ஆப்நகரம்

கொரோனா பாதித்த துறைகளுக்கு அரசின் நிதியுதவி!

கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 Apr 2020, 9:41 pm
கொரோனா பாதிப்பால் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில் துறை முடங்கியுள்ளது. ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வருவாய் குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சில துறைகளில் சில கட்டுப்பாடுகளோடு தொழில் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு விரைவில் மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என்று மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil nitin gadkari


ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான நரெட்கோவுடன் வீடியோ கான்பெரன்ஸ் வாயிலாக இன்று (ஏப்ரல் 29) மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரான நிதின் கட்கரி பேசினார். அப்போது அவர், “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த துறைகளுக்கு விரைவில் நிதியுதவி வழங்குவதற்கான திட்டம் வெளியாகும். அதற்கான ஒப்புதல் பிரதமர் தரப்பிலிருந்து விரைவில் பெறப்படும். இதுகுறித்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பாக நான் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளேன். இறுதி முடிவு பிரதமரால் மேற்கொள்ளப்பட்டு, அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

ஐடி துறையில் பணியிழப்பு நீடிக்கும்!

வேளாண்மை சார்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான சிறப்புத் திட்டம் ஒன்றும் தயாராகி வருவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிறு, குறு நிறுவனங்கள் துறையினர் வேளாண்மை சார்ந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவிடமிருந்து நழுவிச் செல்லும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியா முன்னேற ஆயத்தமாக வேண்டும் எனவும், அதற்கு அனைத்து துறையினரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்