ஆப்நகரம்

பிஎஃப் அறிவிப்பு அமலானது: ஜூலை வரை சலுகை!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புத் தொகையை 10 சதவீதமாகக் குறைக்கும் அறிவிப்பை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 May 2020, 3:39 pm
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 25 முதல் மே 31 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது. கடைசியாக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த தொகுப்பு குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகையில், மூன்று மாதங்களுக்கு பிஎஃப் பிடித்தத் தொகையை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தார்.
Samayam Tamil epf


இதன்படி, தொழிலாளர்கள் தரப்பிலிருந்தும் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் செலுத்தப்படும் பங்களிப்புத் தொகை 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் கையில் பெறும் சம்பளத்தின் அளவு அதிகமாக இருக்கும். கொரோனா சமயத்தில் நிதி நெருக்கடி நிலவும் இச்சூழலில் அரசின் இச்சலுகை தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆறுதல் அளித்தது. இந்த அறிவிப்பின் மூலம் 6.5 லட்சம் தொழில் நிறுவனங்களும், 4.3 கோடி தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. பிஎஃப் சலுகைத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.2,500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ரூ.5000 செலவில் கார் வாங்குவது எப்படி?

நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த இச்சலுகைத் திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. இதன்படி, மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு 10 சதவீத பிஎஃப் பங்களிப்புத் தொகை பிடித்தம் கடைபிடிக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பை நேற்று (மே 18) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டது. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 24 சதவீத பி.எஃப். ஆதரவு பெறும் தொழிலாளர்களுக்கு இச்சலுகை அறிவிப்பு பொருந்தாது என்று அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது என்னடா ஏர்டெலுக்கு வந்த சோதனை!

ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் EPFO அமைப்புக்குச் செலுத்த வேண்டிய தொகையை தாமதமாகச் செலுத்தினால், அதற்கு வழக்கமாக வசூலிக்கும் அபராதத் தொகை வசூலிக்கப்படாது எனவும் மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, நிதி நெருக்கடி இருப்பதால் தொழிலாளர்களுக்கான பிஎஃப் பணத்தை செலுத்துவது சிரமமாக இருக்கிறது. இச்சிரமத்தைக் குறைக்கும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்