ஆப்நகரம்

சாலை விபத்துக்கு பணமில்லா சிகிச்சை: மத்திய அரசு!

மோட்டார் வாகன விபத்தில் சிக்கியவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

Samayam Tamil 1 Jul 2020, 8:54 pm
சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது காயமுற்றவர்களை உடனடியாகச் சிகிச்சை செய்து காப்பாற்றும் நோக்கத்தில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. இதற்காக மோட்டார் வாகனச் சட்டம் - 2019இன் கீழ் புதிய வரைவுத் திட்டம் ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உட்பட பிற சிகிச்சைகளும் இத்திட்டத்தில் அடங்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Samayam Tamil accident


இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போக்குவரத்துத் துறை செயலர்களுக்கும் முதன்மை செயலர்களுக்கும் ஜூலை 10ஆம் தேதிக்குள் கருத்துத் தெரிவிக்கும்படி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இத்திட்டத்தை நாடு முழுவதும் தேசிய சுகாதாரக் கழகம் அமல்படுத்துகிறது. இந்தியாவில் ஏற்கெனவே 21,000 மருத்துவமனைகள் இக்கழகத்தின் கீழ் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மோட்டார் வாகன விபத்து நிதியம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

டிக்டாக் வேண்டாம்... ஷேர்சாட் போதும்! பட்டையைக் கிளப்பும் ஷேர்சாட்!

சாலைகளில் பயணிக்கும் அனைவருக்கும் காப்பீட்டு வசதியைக் கட்டாயமாக்குவதும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் இந்த நிதியம் பயன்படுத்தப்படும். விபத்து நிகழ்ந்து மருத்துவமனைக்குச் செல்லும்போது பணம் காரணமாக சிகிச்சைகள் தாமதம் ஆகக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்