ஆப்நகரம்

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம் – ப.சிதம்பரம்

மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

Samayam Tamil 24 May 2018, 3:03 am
மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
Samayam Tamil P Chidambaram


கா்நாடகா தோ்தலுக்கு பின்னா் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மிகவும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இது தொடா்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தனது ட்விட்டா் பக்கத்தில் கருத்து தொிவித்துள்ளாா். அவரது பதிவில், “ஒவ்வொரு லிட்டா் பெட்ரோலிலும் மத்திய அரசு ரூ.15 சேமிக்கிறது. மேலும் பெட்ரோல் விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசு கூடுதலாக 10 ரூபாய் வரியினை ஒரு லிட்டருக்கு பெறுகிறது.

எனவே பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 25 ரூபாய் வரை அரசால் குறைக்க முடியும். ஆனால் மத்திய அரசு அதனை செய்யாமல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் குறைப்பதன் மூலம் மக்களை ஏமாற்றுவதாக தொிவித்துள்ளாா்”.

2014ம் ஆண்டு நவம்பர் முதல் 2016 ஜனவாி வரையிலான காலகட்டத்தில் அரசு கலால் வரியை 9 முறை உயா்த்திது. ஆனால் கடந்த அக்டோபா் மாதம் ஒரே ஒருமுறை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது. கலால் வரி குறைப்புக்கு பிறகு, வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதனைத் தொடா்ந்து மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4 சதவீதம் வரி குறைக்கப்பட்டது. ப.ஜ.க. ஆளும் மாநிலங்கள் உட்பட மற்ற மாநிலங்களில் இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்