ஆப்நகரம்

பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.30,952 கோடி!

ஊரடங்கு காலத்தில் 20.62 கோடி பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Jun 2020, 8:52 pm
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடப்பதால் பொருளாதார ரீதியாகப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மார்ச் மாத இறுதியில் மத்திய அரசு அறிவித்தது. பெண்களுக்கான சிறப்பு அறிவிப்பாக பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொடங்கியுள்ள வங்கிக் கணக்குகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் 20.62 கோடி பெண்களுக்கு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil jan dhan


இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பெண்களுக்கான நிதியுதவி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தி கீழ் 3 மாதங்களில் ரூ.30,952 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நிதியுதவி அளிக்கும் அரசின் நடவடிக்கையை பெண்கள் மனப்பூர்வமாக வரவேற்றுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் பங்குகளுக்கு நல்ல காலம்... எதை வாங்கினால் லாபம்?

ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படுவதால் இந்த நிதியுதவியை அரசு நீட்டிக்க வேண்டும் பெண்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இன்றைய உரையில் கரீப் கல்யாண் திட்டத்துக்கான சலுகை நவம்பர் மாத இறுதி வரையில் நீட்டிக்கப்படுவதாக மோடி அறிவித்துள்ளார். பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் வீட்டு வேலைகளை கவனிப்பதோடு வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். ஊரடங்கால் வருமானம் இல்லாமல் போயுள்ளதால் அரசின் இந்த நிதியுதவி அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. மத்திய அரசால் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு பணம் வழங்க அரசு எடுத்த முடிவு ஏழை மக்களுக்கு உண்மையிலேயே உதவியாக இருப்பதாகப் பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபர் பங்குகளை நம்பி வாங்கலாமா? மிஸ் பண்ணிடாம படிங்க!

எனினும் ஊரடங்கு காலத்தி்ல் வேலை கிடைக்காததால் அரசு இன்னும் அதிக உதவிகள் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். திடீரென ஏற்பட்ட கொரோனா ஊரடங்கால் உருவாகிய சவால்களை ஏழைகள், பெண்கள், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல பிரிவினர் எதிர்கொள்ள பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் தொடர்ந்து உதவி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்