ஆப்நகரம்

Diesel Price: பெட்ரோல், டீசல் விலை உயரட்டும்… மத்திய அரசு முடிவு

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 May 2018, 5:15 pm
பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil petrol-price


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட மே 20ஆம் தேதிக்கான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2013ஆம் ஆண்டு இருந்த உச்ச விலையையும் தாண்டியது பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருவதாகவும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, கலால் வரியைக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிப்பதாகவும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்தார்

இந்நிலையில், கலால் வரியைக் குறைத்தால் அரசுக்கு வருவாய் குறைந்து நலத்திட்டங்களுக்கு போதிய நிதி இல்லாத சூழல் ஏற்படும் என்பதால் அந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ள நிலையில் விலை குறைப்பு பற்றி இப்போதைக்கு பரிசீலிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த மே14ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் விலை ரூ.1.61 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையும் ரூ.1.64 உயர்வு கண்டுள்ளது. முன்னதாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டதும் நினைவூட்டத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்