ஆப்நகரம்

வங்கிக் கணக்கில் பணம்: வதந்திகளை நம்பவேண்டாம்!

பெண்களின் வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் நிவாரண நிதி தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Apr 2020, 11:32 pm
கொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் 26ஆம் தேதி அறிவித்திருந்தார். பெண்களுக்கான சிறப்பு அறிவிப்பாக, பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொடங்கியுள்ள வங்கிக் கணக்குகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil வங்கிக் கணக்கில் பணம்_ வதந்திகளை நம்பவேண்டாம்


ஏப்ரல் மாதத்துக்கான நிதியுதவி செலுத்தப்பட்டுள்ள நிலையில், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அரசு மீண்டும் எடுத்துக்கொள்வதாக வதந்திகள் பரவின. அதற்கு மத்திய நிதியமைச்சகம் இன்று விளக்கமளித்துள்ளது. முதல் தவணைக்கான ரூ.500 தொகை ஜன் தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்கான நிதியும் உறுதியாகச் செலுத்தப்பட்டுவிடும் எனவும் கூறியுள்ள நிதியமைச்சகம், இது தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுகொண்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் வளராது: ஆய்வில் எச்சரிக்கை!

பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கத் தாமதம் ஆனாலோ அல்லது எடுக்காமல் விட்டுவிட்டாலோ, அந்தப் பணத்தை அரசே மீண்டும் எடுத்துக்கொள்ளும் என்று செய்திகள் பரவின. வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நிதிச் சேவைகள் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளிலோ அல்லது ஏடிஎம்களிலோ இந்தப் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்கலாம்.

கொரோனாவால் வருவாய் இழக்கும் நிறுவனங்கள்!

பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 38.08 கோடி வங்கிக் கணக்குகள் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன. அதில் 20.60 கோடி கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டவை ஆகும். ஏப்ரல் 1 நிலவரப்படி, ஜன் தன் கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகையின் அளவு ரூ.1.19 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்