ஆப்நகரம்

விவசாயிகளை பாதுகாப்பது அரசின் கடமை: வேளாண்துறை அமைச்சர் உறுதி

விதை விற்பனை நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.

TNN 11 Apr 2016, 4:20 pm
விதை விற்பனை நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
Samayam Tamil govt wont allow seed companies to exploit farmers agriculture minister
விவசாயிகளை பாதுகாப்பது அரசின் கடமை: வேளாண்துறை அமைச்சர் உறுதி

மான்சாண்டோ நிறுவனம், பி.டி. பருத்தி விதைகளை அதிக விலைக்கு, விவசாயிகளை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதுதொடர்பாக, கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தும் உள்ளது.

எனினும், மான்சாண்டோ நிறுவனத்தின் வர்த்தகப் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், இதுபற்றி கருத்து கூறியுள்ள வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், விவசாயிகளின் நலன் முற்றிலும் பாதுகாக்கப்படும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

விதை விற்பனை நிறுவனங்களின் ஏகபோக வர்த்தகப் போக்குக்கு, தீர்வு காணப்படும் என்றும், விவசாயிகளை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்