ஆப்நகரம்

வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி.. வரி உயர்வு ரத்து!

ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்த வேண்டாம் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு.

Samayam Tamil 31 Dec 2021, 5:22 pm
ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தன.
Samayam Tamil apparel shopping


ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்த வேண்டாம் என ஜவுளித் துறையினர் அரசிடம் வலியுறுத்தினர். வரி உயர்வால் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் தலைவலி ஏற்படும்.

இதுபோக, ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்த வேண்டாம் என பல்வேறு தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளும் வலியுறுத்தின. இந்நிலையில், ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்த வேண்டாம் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன் வாங்க அனுமதி வேண்டும்: தமிழக நிதியமைச்சர் வேண்டுகோள்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 46ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையடுத்து, ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்த வேண்டாம் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்