ஆப்நகரம்

ஐபோன் விலை குறைப்பு!

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி அமலானதை அடுத்து ஆப்பிள் ஐபோன்களின் விலை திடீரென சரிந்துள்ளது.

TOI Contributor 3 Jul 2017, 12:38 pm
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி அமலானதை அடுத்து ஆப்பிள் ஐபோன்களின் விலை திடீரென சரிந்துள்ளது.
Samayam Tamil gst impact iphone prices getting down till 7 5 percent
ஐபோன் விலை குறைப்பு!


ஒரு சேதம் ஒரு வரி எனும் பெயரில் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களின் விலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும் என்று சொல்லப்படும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஐபோன் 7ன் விலை 85,400 ரூபாயாக குறைந்துள்ளது.

அதே போல் 32ஜிபி ஐபோன் 6ன் விலை 6.2 சதவீதம் விலை குறைந்துள்ளது. அதாவது தற்போது 46,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூருவில் தயாரிக்கப்படும் ஐபோன் எஸ்இ-யின் விலை 27,200 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக குறைந்துள்ளது. அதிலேயே 128 ஜிபியின் விலை 35,000 ரூபாயாக விலை குறைந்துள்ளது.

இந்த ஆண்டின் மூன்று மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாய் 20 சதவீதம் உயர்ந்துள்ளதை அடுத்து இனி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்