ஆப்நகரம்

உணவு பார்சல், டெலிவரிக்கும் ஜிஎஸ்டி உண்டு.. வெளியானது உத்தரவு!

உணவகங்களில் பார்சல், டெலிவரி சேவைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 Jan 2023, 12:45 pm
உணவகங்களில் டைனிங், பார்சல், வீட்டுக்கே நேரடி டெலிவரி ஆகிய அனைத்து சேவைகளுக்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தின் (AAR) குஜராத் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil hotel parcel
food parcel


உணவகங்களில் டைனிங், பார்சல், டெலிவரி என மூன்று வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்று சேவைகளுமே உணவக சேவையாக கருதப்படுமா எனவும், 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா எனவும் ரித்தி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தின் குஜராத் அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

உணவகத்தால் சமைக்கப்படாமல் வெளியில் இருந்து வாங்கப்படும் உணவுகளை தனியாக ஒதுக்கிவிட்டது தீர்ப்பாணையம். இதுபோன்ற உணவுகள் உணவக சேவை பிரிவின் கீழ் வராது எனவும், அவற்றுக்கு தனித்தனியாக ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை நெருங்கிவிட்டது.. IMF தலைவர் எச்சரிக்கை!
ஜிஎஸ்டி கவுன்சில் 2017ஆம் ஆண்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையிலும், மத்திய மறைமுக வரிகள் வாரியம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையிலும், உணவகத்தின் பார்சல் மற்றும் டெல்வரி சேவைகள் அனைத்தும் ‘உணவக சேவைகள்’ பிரிவின் கீழ் வருவதாக மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

இதனால், உணவகத்தில் சமைக்கப்பட்டு வழங்கப்படும் உணவுகளின் டைனிங், பார்சல், டெலிவரி ஆகிய மூன்று சேவைகளுக்குமே 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது. உணவகத்தில் சமைக்கப்பட்ட உணவை உணவகத்திலேயே சாப்பிட்டாலும், பார்சல் எடுத்துச் சென்று சாப்பிட்டாலும், டெலிவரி பெற்று சாப்பிட்டாலும் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்று மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

வெளியில் சமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கு தனித்தனியே ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் எனவும் மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்