ஆப்நகரம்

Happiest Minds: 111% வளர்ச்சி - எண்ட்ரியே வெறித்தனம்!

ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனம் இன்று முதல் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Sep 2020, 12:19 pm

ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஐபிஓ கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் பட்டியலிடப்பட்டுள்ளது.
Samayam Tamil investor


ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ.351ஆக இருக்கிறது. ஐபிஓவில் வெறும் ரூ.166க்கு விநியோகிக்கப்பட்ட பங்கு விலை தற்போது பங்குச் சந்தையில் ரூ.351ஆக இருக்கிற்து. இது 111% உயர்வாகும்.

தேசிய பங்குச் சந்தையில் பங்கு விலை ரூ.350ஆக இருக்கிறது. இது 110.84% உயர்வாகும். செப்டம்பர் 7 முதல் 9 வரை ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் பங்குகள் விநியோகிக்கப்பட்டன. ரூ.165-166 விலை வரம்பில் விற்பனை செய்யப்பட்ட ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ், 151 முறை சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது.

Stock Market: மார்க்கெட் சரிவு - இன்று டாப் பங்குகள் இவைதான்!

இன்று காலை 10.01 மணி நிலவரப்படி ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ.384.15ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.382.40ஆகவும் இருந்தது.

இந்நிறுவனத்தின் புரமோட்டார் அசோக் சூட்டா. வலுவான நிர்வாகம், பலமான பிண்ணனி, தொழில் அடிப்படை, டிஜிட்டல் தொழில் என சிறப்பான அம்சங்கள் இருப்பதால் அதிக பிரீமியத்திற்கு வரும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். அதற்கேற்ப 111% வளர்ச்சியை தொட்டுள்ளது.

ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க 148 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. அவற்றில் 36 நிறுவனங்கள் ஃபார்ச்சூன் 200 என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்