ஆப்நகரம்

பென்சன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்... ராணுவத் துறை அறிவிப்பு!

பென்சன் பெறும் ராணுவ அதிகாரிகளுக்கான குடும்ப பென்சன் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Oct 2021, 3:17 pm
இன்னும் சில நாட்களில் தீபாவளி வரவிருக்கும் நிலையில், ஆயுதப் படை வீரர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி, குடும்ப பென்சன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடும்ப பென்சன் தொகையின் அதிகபட்ச வரம்பை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தற்போது உயர்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மிக உயர்ந்த பென்சன் தொகை மாதத்திற்கு ரூ.2.5 லட்சமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pension


இந்த நடவடிக்கையால் மரணமடைந்த மத்திய அரசு ஊழியர்களின் (பாதுகாப்புத் துறை) குடும்ப உறுப்பினர்கள் நல்ல முறையில் வாழ்வதற்கான வழியை அளிப்பதோடு அவர்களுக்கு போதுமான நிதி பாதுகாப்பையும் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குடும்ப பென்சன் வரம்பு ரூ.1.25 லட்சமாக இருந்தது. குடும்ப பென்சன் வசதியின் மேல் உச்சவரம்பு மாதத்திற்கு 45,000 ரூபாயிலிருந்து ரூ.1.25 லட்சமாக சமீபத்தில்தான் உயர்த்தப்பட்டது.

பென்சன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்! டிஜிலாக்கரிலேயே எல்லாம் கிடைக்கும்!
மனைவி மற்றும் கணவர் இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, அவர்களது குழந்தைக்கு தாய் தந்தை என இருவரது மரணத்திற்காக இரண்டு குடும்ப பென்சன் பெறத் தகுதி உள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில்தான் குடும்ப பென்சன் தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றியமைத்தது. பணியாளரால் நியமனம் செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் (நாமினி) அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை இழப்பீடு வழங்கப்படலாம் என்று முடிவு செய்தது. அவ்வாறு யரையும் நாமினி என்று தேர்வு செய்யாமல் இருந்தால் பென்சன் தொகையானது தகுதியுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது குடும்ப பென்சன் வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்