ஆப்நகரம்

HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு EMI குறைப்பு.. கடன் வாங்கியோருக்கு நிம்மதி!

எச்டிஎஃப்சி வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 11 Apr 2023, 4:05 pm
எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், கடனை திருப்பி செலுத்தி வருவோருக்கு இஎம்ஐ (EMI) தொகை குறையும்.
Samayam Tamil hdfc bank
hdfc bank


எச்டிஎஃப்சி வங்கி கடன்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை (MCLR rate) குறைத்துள்ளது. MCLR என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதமாகும். ஏப்ரல் 10ஆம் தேதி முதல் வட்டி குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி ஓவர்நைட் MCLR வட்டி 0.85% குறைக்கப்பட்டு 7.80 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு மாதத்துக்கான MCLR வட்டி 0.70% குறைக்கப்பட்டு 7.95 சதவீதமாக குறைந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கான MCLR வட்டி விகிதம் 0.40% குறைக்கப்பட்டு 8.30 சதவீதமாக குறைந்துள்ளது. ஆறு மாதங்களுக்கான MCLR வட்டி விகிதம் 0.10% குறைக்கப்பட்டு 8.7 சதவீதமாக குறைந்துள்ளது. 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு ஆகிய காலங்களுக்கான MCLR வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் எச்டிஎஃப்சி வங்கியில் கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்தி வருவோருக்கு மாத இஎம்ஐ கட்டணம் குறையும். இது கடன் வாங்கியோருக்கு சற்று நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனிநபர் கடன் (Personal loan), வாகன கடன் (Automobile loan) வாங்கியோருக்கு இஎம்ஐ குறையும்.

இந்த மாதம் ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், ரெப்போ வட்டி தொடர்ந்து 6.50% ஆக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது எச்டிஎஃப்சி வங்கி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது கடனாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளது. மற்ற வங்கிகளும் இதேபோல கடனுக்கான வட்டியை குறைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்