ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ் - அடித்தது செம ஜாக்பாட்!

சீனியர் சிட்டிசன்களுக்கான ஸ்பெஷல் திட்டம் மேலும் நீட்டிப்பு...

Samayam Tamil 28 Mar 2022, 5:27 am
கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சில வங்கிகள் சீனியர் சிட்டிசன் ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை (Senior Citizen Special Fixed Deposit) அறிமுகப்படுத்தின. இத்திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டது.
Samayam Tamil Senior citizen


இதனால் ஏராளமான சீனியர் சிட்டிசன்கள் இந்த ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தனர். இத்திட்டங்களுக்கு சீனியர் சிட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. இதனால் இந்த ஸ்பெஷல் திட்டங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) 2020ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சீனியர் சிட்டிசன்களுக்கான ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை (HDFC Senior Citizen Care Fixed Deposit) அறிமுகப்படுத்தியது. இதையடுத்து 2022 மார்ச் 31ஆம் தேதியுடன் இத்திட்டம் காலாவதியாக இருந்தது.

செம லாபத்தில் தமிழக அரசு.. அள்ளிக்கொடுத்த டைட்டன்!
இந்நிலையில், சீனியர் சிட்டிசன்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை எச்டிஎஃப்சி வங்கியின் சீனியர் சிட்டிசன் ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வட்டி எவ்வளவு ?

சாதாரணமாகவே ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் இன்னும் கூடுதலாக 0.25% வட்டி வழங்கப்படுகிறது.

ஆக, ஏற்கெனவே கூடுதலாக வழங்கப்படும் 0.50% வட்டியுடன் 0.25% வட்டியும் சேர்த்து மொத்தம் 0.75% கூடுதல் வட்டி சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்