ஆப்நகரம்

வட்டியை உயர்த்திய HDFC பேங்க்... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2021, 1:21 pm
வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் என்ற நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது கையிருப்பில் உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம்.
Samayam Tamil hdfc bank


கொரோனா வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதால் சேமிப்பின் மீதான முக்கியத்துவம் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். நிறைய சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும் வங்கிகள் வாயிலான சேமிப்புகளைப் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். அதுவும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிகப் பேர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி முதலீடு செய்தால் நல்லது. பல்வேறு வங்கிகள் கடந்த சில மாதங்களில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதங்களை மாற்றி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி பேங்க் தனது ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது.
Fixed Deposit வட்டியில் திடீர் மாற்றம்.. புதிய வட்டி விகிதம் இதுதான்!
தற்போதைய அறிவிப்பின்படி, 36 மாதங்கள் முதிர்வு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 6.05 சதவீத வட்டியே இதற்குக் கிடைத்தது. 60 மாதங்கள் முதிர்வு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் மற்றவர்களை விட 0.25 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு முன்னர் ஐசிஐசிஐ வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்