ஆப்நகரம்

Senior Citizen: சீனியர் சிட்டிசன்களுக்கு பண மழை.. வட்டி விகிதம் உயர்வு!

HDFC Recurring Deposit Interest Rate 2022: எச்டிஎஃப்சி தொடர் வைப்பு நிதியில் சீனியர் சிட்டிசன்கள் ஏற்கெனவே பெறும் கூடுதல் வட்டியுடன் சேர்த்து இன்னும் எக்ஸ்ட்ரா வட்டி பெறலாம்.

Samayam Tamil 25 May 2022, 12:58 pm
தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank) தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 27 மாதம் முதல் 120 மாதம் வரையிலான தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil cash


புதிய வட்டி விகிதங்கள் மே 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.

புதிய வட்டி

6 மாதம் : 3.50%

9 மாதம் : 4.40%

12 மாதம் - 24 மாதம் : 5.10%

27 மாதம் - 36 மாதம் : 5.40%

39 மாதம் - 60 மாதம் : 5.60%

90 மாதம் : 5.75%

120 மாதம் : 5.75%

Fixed Deposit: இனி வைப்பு தொகையில் அதிக லாபம்.. வட்டி விகிதம் உயர்வு!
சீனியர் சிட்டிசன்களுக்கு

6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான எல்லா தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கும் பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு 0.50% அதிக வட்டி வழங்கப்படுகிறது.

5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரையிலான தொடர் வைப்பு நிதி திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் 0.50% கூடுதல் வட்டியுடன் இன்னும் 0.25% அதிக வட்டி வழங்கப்படும். அதாவது சீனியர் சிட்டிசன்களுக்கு மொத்தம் 0.75% கூடுதல் வட்டி கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்