ஆப்நகரம்

HDFC வாடிக்கையாளர்களுக்கு அதிக கட்டணம்... புது விதிமுறை அமல்!

SMS அலர்ட்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தி எச்டிஎஃப்சி வங்கி அறிவிப்பு.

Samayam Tamil 8 Jan 2022, 11:06 am
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) வாடிக்கையாளர்களுக்கான SMS அலர்ட்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியாகியுள்ளது.
Samayam Tamil HDFC Bank


எச்டிஎஃப்சி வங்கியின் இன்ஸ்டா அலர்ட் (InstaAlert) SMS சேவைக்கு இதுவரை ஒரு காலாண்டுக்கு 3 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இனி ஒரு SMSக்கு 20 பைசாவும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என எச்டிஎஃப்சி வங்கியின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியின் இன்ஸ்டா அலர்ட் ஒரு மிக முக்கியமான சேவையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஈசியாக கண்காணிக்க முடிகிறது.

SBI வங்கி கணக்குகள் முடக்கம்? என்னதான் நடக்குது?
எச்டிஎஃப்சி இன்ஸ்டா அலர்ட் SMS சேவை வாயிலாக வங்கிக் கணக்கில் உள்ள பணம், கடைசி தேதி, போதிய தொகை இல்லாமை உள்ளிட்டவை குறித்து தகவல் நேரடியாக மொபைலுக்கே வந்துவிடும். வங்கித் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளும் SMS மூலம் வரும்.

இதுபோக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் தொடர்பான செய்திகளும் வரும். இந்நிலையில், இந்த அத்தியாவசிய சேவைக்கான கட்டணத்தை எச்டிஎஃப்சி வங்கி உயர்த்தியுள்ளது. எனினும், இமெயில் வாயிலான அலர்ட்டுகள் தொடர்ந்து இலவசமாகவே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்