ஆப்நகரம்

வீட்டு உபயோக பொருட்களின் விலை உயரப்போகுது.. இதுதான் சரியான டைம்!

வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மார்ச் மாதத்துக்குள் உயரும் என தகவல்.

Samayam Tamil 9 Jan 2022, 5:57 pm
டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஒரு கெட்ட செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
Samayam Tamil Home appliances


உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வீட்டு உபயோக பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே புத்தாண்டு தொடங்கியதும் ஏசி, ஃப்ரிட்ஜ் விலை உயர்ந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து இம்மாதத்தின் இறுதிக்குள் அல்லது மார்ச் மாதத்திற்குள் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மேலும் 5 முதல் 10 விழுக்காடு உயரும் என நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்வு.. ஐசிஐசிஐ கஸ்டமர்களுக்கு கஷ்டம்!
Panasonic, LG, Haier ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே விலையை உயர்த்துவதாக அறிவித்துவிட்டன. Sony, Hitachi, Godrej ஆகிய நிறுவனங்கள் மார்ச் மாத இறுதிக்குள் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடவுள்ளன.

வீட்டு உபயோக பொருட்களின் விலை மார்ச் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 5 முதல் 7 விழுக்காடு உயரும் என நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Panasonic நிறுவனம் ஏசி விலையை 8% உயர்த்திவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

வீட்டு உபயோகப் பொருட்களின் விலை விரைவில் உயரவுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் உடனடியாக பொருட்களை வாங்குவதன் மூலம் பணத்தை சேமிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்