ஆப்நகரம்

சிலிண்டர் டெலிவரிக்கு இனி இது கட்டாயம்!

வீட்டில் சமையல் சிலிண்டர்களை டெலிவரி செய்வதற்கு நவம்பர் 1 முதல் ஓடிபி எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Oct 2020, 7:19 pm
வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்கள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகின்றன. இதற்கான முன்பதிவுக்கு எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால், மொபைல் ஆப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் டெலிவரி முறையில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக இந்தப் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.
Samayam Tamil otp


இந்தப் புதிய நடைமுறை முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன் பின்னர் உள்ள நிலவரத்தையும் மக்களிடமிருந்து வரும் கருத்துகளையும் பொறுத்து மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்துக்கான முன்னோட்டம் ஏற்கெனவே ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறை மிகவும் சுலபமானதுதான். அதாவது சிலிண்டருக்கு இனி முன்பதிவு செய்யும் போது அவர்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை சிலிண்டர் டெலிவரி பெறும் போது காட்டினால் போதும்.

வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தால் ரூ.5,000!

ஒருவேளை உங்களது மொபைல் எண் எரிவாயு விற்பனை நிறுவனத்துடன் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது மொபைல் எண் மாறிவிட்டாலோ நீங்கள் அதை விநியோக சமயத்தில் புதுப்பிக்க முடியும். இதற்காக, டெலிவரி மேனிடம் ஒரு செயலி இருக்கும். டெலிவரி நேரத்தில் அந்த செயலியின் உதவியுடன் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் புதுப்பிக்கலாம். அந்த மொபைல் ஆப் மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். அதன் பின்னர் அதே எண்ணிலிருந்து ஓடிபியை உருவாக்க முடியும். சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரிசெய்யும் நோக்கத்தில்தான் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்