ஆப்நகரம்

2021ல் வீடு விற்பனை அமோகம்.. சென்னையில் செம சேல்ஸ்!

2021ஆம் ஆண்டில் பட்டையை கிளப்பிய வீடு விற்பனை.

Samayam Tamil 2 Jan 2022, 7:59 pm
2021ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி நகரங்களில் வீடு விற்பனை படு வேகத்தில் உயர்ந்துள்ளது. 2021ல் நாட்டின் மிகப்பெரிய ஏழு நகரங்களில் வீடு விற்பனை 71% உயர்ந்துள்ளது.
Samayam Tamil Housing


2021ஆம் ஆண்டில் ஏழு நகரங்களிலும் 2,36,530 வீடுகள் விற்பனையாகியுள்ளன. எனினும், கொரோனா காலத்துக்கு முன்பிருந்த டிமாண்டை விட தற்போது வீடுகளுக்கான டிமாண்ட் 10% குறைந்துள்ளது என அனராக் நிறுவனம் வெளியிட்டுள்ள ரிப்போர்ட் கூறுகிறது.

2019ஆம் ஆண்டில் 2,61,358 வீடுகளும், 2020ஆம் ஆண்டில் 1,38,350 வீடுகளும் விற்பனையாகியுள்ளன. வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது வீடு விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணம் என அனராக் நிறுவனம் கூறுகிறது.

சொத்து வரி ரத்து.. புத்தாண்டுக்கு சூப்பர் பரிசு!
இதுபோக, வீடு வாங்க விரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. இத்துடன் மகாராஷ்டிராவில் முத்திரை வரி குறைப்பு, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வழங்கிய சலுகைகள் உள்ளிட்ட காரணங்களால் வீடு விற்பனை உயர்ந்துள்ளதாக அனராக் ரிப்போர்ட் கூறுகிறது.

நான்காம் காலாண்டில் பண்டிகை சீசன் காரணமாக வீடு விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், 2021ஆம் ஆண்டின் மொத்த வீடு விற்பனையில் நான்காம் காலாண்டுக்கு மட்டும் 39% பங்கு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வீடு விற்பனை 86% உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்