ஆப்நகரம்

வீட்டுக் கடன் வாங்கியோருக்கு ஷாக்.. வட்டி உயர்த்தப்படுவதாக அறிவிப்பு!

எச்டிஎஃப்சி நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 8 May 2022, 12:54 pm
இந்தியாவின் மிகப்பெரிய ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான எச்டிஎஃப்சி (HDFC) வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எச்டிஎஃப்சி உயர்த்தியுள்ளது.
Samayam Tamil home loan


எச்டிஎஃப்சி நிறுவனம் தனது அடிப்படை வட்டி விகிதத்தை (RPLR) 0.30% உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான EMI தொகை உயரும். புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு மட்டுமல்லாமல், ஏற்கெனவே EMI செலுத்தி வருவோருக்கும் EMI தொகை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதம் உயர்வு மே 9ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் எச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது. இதன்படி, வீட்டுக் கடன்களுக்கான புதிய வட்டி விகிதங்களை பார்க்கலாம்.

சிபில் ஸ்கோர் (CIBIL Score) 750க்கு மேல் இருப்பவர்களுக்கு 7% வட்டி விதிக்கப்படும்.

பெட்ரோல் விலையின் அடுத்த ஆட்டம்.. அதுவும் இந்த வாரமே!
30 லட்சம் ரூபாய்:

30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 7.05%, மற்றவர்களுக்கு 7.10% வட்டி விதிக்கப்படும்.

75 லட்சம் ரூபாய்:


75 லட்சம் ரூபாய் வரியிலான வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 7.30%, மற்றவர்களுக்கு 7.35% வட்டி விதிக்கப்படும்.

75 லட்சம் ரூபாய்க்கு மேல்:

75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 7.40%, மற்றவர்களுக்கு 7.45% வட்டி விதிக்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்