ஆப்நகரம்

Take Home Salary குறையும்.. PF உயர்வு.. புதிய ஊதிய சட்டம் என்ன செய்யும்?

புதிய ஊதிய சட்டத்தால் ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் வரும்?

Samayam Tamil 10 Jun 2022, 1:17 pm
புதிய ஊதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கு இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதிய ஊதிய சட்டத்தால் ஊழியர்களுக்கான சம்பள அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மாறப்போகிறது. இதன்படி, சம்பள அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பார்க்கலாம்.
Samayam Tamil cash


ஒரு ஊழியருக்கான மொத்த சம்பளத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அடிப்படை சம்பளம் என்பது பிரதான பிரிவு. அதன்பின் வீட்டு வாடகை படி, இதர படித் தொகை, வருங்கால வைப்பு நிதி (PF), பணிக்கொடை (Gratuity) உள்ளிட்டவை அடங்கும்.

புதிய ஊதிய சட்டப்படி, ஒரு ஊழியர் பெறும் சிடிசி (CTC - Cost to company) தொகையில் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும். மீதமுள்ள தொகையில் வீட்டு வாடகை படி உள்ளிட்ட இதர பகுதிகள் இருக்க வேண்டும்.

வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் EMI உயர்வு.. இன்று முதல் அமல்!
தற்போது உள்ள நடைமுறையில் மொத்த சிடிசி தொகையில் அடிப்படை சம்பளம் 30% முதல் 40% ஆக உள்ளது. இதை 50% ஆக உயர்த்துகிறது புதிய ஊதிய சட்டம். இதனால், உங்கள் கையில் கிடைக்கும் மாதச் சம்பளம் (Take home salary) குறையும்.

அடிப்படை சம்பளம் உயரும்போது PF தொகையும் உயருகிறது. ஏனெனில், அடிப்படை சம்பளத்தை வைத்துதான் PF கணக்கிடப்படுகிறது. இதனால் மாதம் தோறும் அதிக PF தொகை பிடித்துக்கொள்ளப்படும். விளைவாக, டேக் ஹோம் சம்பளம் குறையும்.

அடிப்படை சம்பளத் தொகை உயரும்போது வரிக்குட்பட்ட வருமான வரம்பும் உயருகிறது. இதனால் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகை உயரலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்