ஆப்நகரம்

​ஓய்வூதிய திட்டம்.. தனியார் ஊழியர்கள் எப்படி திட்டமிட்டு பென்சன் பெறுவது?

​தனியார் ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்துக்கு திட்டமிட்டு முதலீடு செய்வது எப்படி?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 14 May 2023, 2:20 pm
பணி ஓய்வுபெற்ற பிறகு ஓய்வுக்கால நிதி பாதுகாப்பு குறித்து அனைவருமே பணிக்காலத்திலேயே திட்டமிட வேண்டியது அவசியம். அரசு ஊழியர்களை போல தனியார் ஓழியர்களுக்கும் ஓய்வூதியம் போன்ற பணி ஓய்வுக்கால பாதுகாப்பு அவசியம். இந்தியாவில் பலரும் ஓய்வுக்காலம் குறித்து திட்டமிடுவதில்லை என சில ஆய்வுகள் கூறுகின்றன. அவ்வகையில் தனியார் ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்துக்கு எப்படி திட்டமிடுவது என்பதை பார்க்கலாம்.
Samayam Tamil how private employees can invest in nps scheme to create a retirement corpus and pension income
​ஓய்வூதிய திட்டம்.. தனியார் ஊழியர்கள் எப்படி திட்டமிட்டு பென்சன் பெறுவது?


​தேசிய ஓய்வூதிய திட்டம்​

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2009ஆம் ஆண்டில் தனியார் ஊழியர்களும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.

​பிரான் எண்​

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு பிரான் எண் (PRAN Number) எனப்படும் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்படும். பயனாளியின் வாழ்க்கை முழுவதும் இந்த நிரந்தர ஓய்வூதிய கணக்கு என் நடைமுறையில் இருக்கும்.

​வேலைகள் மாற்றினாலும்​

தனியார் ஊழியர்கள் வேறு வேலைகளுக்கு மாறினாலும், வேறு நிறுவனத்துக்கு மாறினாலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நிதியும், பலன்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எளிதாக புதிய நிறுவனத்துக்கும் உங்களது ஓய்வூதிய நிதியை மாற்றிக்கொள்ளலாம்.

​பணி ஓய்வு​

பயனாளி பணி ஓய்வுபெறும்போது தனது தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கில் உள்ள பணத்தை எடுத்து ஆண்டுத்தொகையில் (Annuity) முதலீடு செய்து நிலையான ஓய்வூதிய வருமானம் பெறலாம்.

​வருமான வரி சலுகை​

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, வருமான வரிச் சட்டம் பிரிவு 80CCD (1) கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல் பிரிவு 80CCD (1B) கீழ் கூடுதலாக 50,000 ரூபாயும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது. ஆக, தேசிய ஓய்வூதிய திட்டம் வாயிலாக ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமான வரி சேமிக்கலாம்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்