ஆப்நகரம்

ரேஷன் கார்டு இருக்கா? உடனே இந்த வேலைய முடிங்க!

ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினர்களின் பெயரை உடனே அப்டேட் செய்ய வேண்டும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 19 Aug 2022, 9:18 am
Samayam Tamil ration card
ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம். ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் புதிதாக இணையும் பெண்ணின் பெயரை அவரது தந்தையின் குடும்ப அட்டையிலிருந்து நீக்கிவிட்டு கணவரின் குடும்ப அட்டையில் சேர்க்க வேண்டும். அந்தப் பெண்ணின் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் இருக்க வேண்டும்.

அதேபோல, திருமணம் ஆனபின்னர் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். குழந்தையின் பெயரைச் சேர்க்க ஆதார் கார்டில் தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். முகவரியையும் மாற்ற வேண்டியிருக்கும்.

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!

ஆதார் அட்டையில் இந்த விவரங்களை அப்டேட் செய்த பிறகு, திருத்தப்பட்ட ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டின் பெயரை உணவுத் துறை அலுவலர் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரைச் சேர்க்க ஆதார் அட்டையும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் தேவை.

வீட்டில் அமர்ந்தபடியே நீங்கள் புதிய உறுப்பினரின் பெயரைச் சேர்க்க முடியும். அதற்கு, உங்கள் மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் (https://tnpds.gov.in/) அதிகாரப்பூர்வ சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்