ஆப்நகரம்

அரசிடம் இலவச சிலிண்டர் வாங்குவது எப்படி?

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 23 Jun 2021, 8:11 pm
வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை மத்திய மோடி அரசு அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
Samayam Tamil LPG


இத்திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு வேறு எந்தத் திட்டத்திலும் இதற்கு முன் சமையல் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

உங்க பான் கார்டு ஆதாருடன் லிங்க் ஆகியிருக்கா? செக் பண்றது ஈசி!
ஆவணங்களைப் பொறுத்தவரையில், நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்துத் தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள், அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதிச் சான்றிதழ், முகவரிக்கான ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் ஆகியவற்றை ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

பிஎம் கிசான் பணம்... இவர்களுக்கெல்லாம் கிடைக்காது!
இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியில் சமர்ப்பிக்க வேண்டும். இலவச சமையல் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியமாகும். முதல் முறையாக சிலிண்டர் இணைப்பு பெறும்போது அதற்கான தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதன் பின்னர் அவர் சிலிண்டருக்கான பணத்தைக் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும். உஜ்வாலா திட்டத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு இலவச சிலிண்டர் மட்டுமே வாங்க முடியும்.

லட்சாதிபதியாக அருமையான வாய்ப்பு... பழசுதான் ஆனாலும் மவுசு அதிகம்!
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடி இலவச கேஸ் சிலிண்டர் இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் இலவச சிலிண்டர் வாங்க நினைப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்