ஆப்நகரம்

SBI செக் புக் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

ஆன்லைன் மூலமாகவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செக் புக் அப்ளை செய்து வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 17 Jan 2021, 7:36 pm
உங்களது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கின் செக் புத்தகத்தில் அனைத்து லீஃப்களையும் காலி செய்துவிட்டால் என்ன செய்வீர்கள்? புதிய செக் புத்தகத்தை அப்ளை செய்து வாங்குவது அவ்வளவு எளிதானதா? இதற்காக வங்கிக் கிளைக்குச் சென்று வரிசையில் காத்துக் கிடக்க வேண்டுமா? இல்லை. நீங்கள் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து வாங்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பித்தாலே செக் புக் உங்களது வீடு தேடி வரும். 25, 50, 100 என்ற எண்ணிக்கையில் செக் லீஃப் வாங்க முடியும்.
Samayam Tamil sbi


>> எஸ்பிஐ நெட் பேங்கிங்கில் உங்களது யூசர் நேம் மற்றும் பாஸ்வர்டு கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

>> லாகின் செய்த பிறகு புதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும். அதில் Request & Enquiries என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும்.

>> டிராப் டவுன் மெனுவில் Cheque Book Request என்பதை கிளிக் செய்யவும்.

>> அடுத்த பக்கத்தில் உங்களது வங்கிக் கணக்கு விவரம் முழுவதும் காண்பிக்கப்படும். அதில் எந்த வங்கிக் கணக்குக்கு உங்களுக்கு செக் புக் தேவையோ அந்தக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

>> அடுத்த பக்கத்தில் உங்களது செக் புக்கில் எத்தனை லீஃப் இருக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து Submit கொடுக்கவும்.

>> செக் புக் விவரங்களை சரிபார்த்து உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவிட்டு Confirm கொடுத்தால் செக் புக் உங்களுக்கு அனுப்பப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்