ஆப்நகரம்

கேஸ் சிலிண்டருக்கு அரசின் மானியம்! இப்படி செக் பண்ணலாம்!!

சமையல் சிலிண்டருக்கான மானியம் வருவது குறித்து ஆன்லைனிலேயே நீங்கள் செக் பண்ணலாம்...

Samayam Tamil 20 Nov 2021, 10:35 am
நம் அனைவரின் வீட்டிலுமே சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கும். மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ நாம் சிலிண்டர் வாங்குவோம். சிலிண்டர் விலையும் 1000 ரூபாயைத் தாண்டிவிட்டது. ஆனால் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வரும் மானியம் நமது சுமையை சற்று குறைக்கும். ஆனால் நிறையப் பேருக்கு சிலிண்டர் மானியம் வருவதே தெரியாது. அதை எப்படித் தெரிந்துகொள்வது.
Samayam Tamil lpg


அனைத்து LPG வாடிக்கையாளர்களுமே சந்தை விலையில் முதலில் சிலிண்டரை வாங்க வேண்டும். அதன் பின்னரே மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து நேரடியாக செலுத்தப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மத்திய அரசு மானியத்தில் வழங்குகிறது.

சிலிண்டருக்கான மானியம் உங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே மிகச் சுலபமாகப் பார்க்கலாம்.

http://mylpg.in/ என்ற வெப்சைட்டில் சென்று உங்களுடைய எல்பிஐ ஐடியை பதிவிட வேண்டும்.

நீங்கள் சிலிண்டர் வாங்கும் கம்பெனி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். சிலிண்டருக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரையும் கொடுக்க வேண்டும்.

மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட்டு 'proceed' கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக வரும் புதிய பக்கத்தில் உங்களது ஈமெயில் ஐடி கொடுத்து பாஸ்வர்டு உருவாக்க வேண்டும்.

இது முடிந்ததும் உங்களது ஈமெயில் ஐடிக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும். அதை கிளின் செய்தால் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும்.

மீண்டும் http://mylpg.in/ வெப்சைட்டில் லாகின் செய்து View Cylinder Booking History/subsidy transferred’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மானியம் தொடர்பான விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்