ஆப்நகரம்

FASTag கணக்கில் பேலன்ஸ் இருக்கா? செக் பண்றது ஈசி!

உங்களுடைய FASTag கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்று தெரிந்துகொள்ள இதைச் செய்தால் போதும்.

Samayam Tamil 3 Jul 2022, 5:28 pm
முன்பெல்லாம் சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, நாடு முழுவதும் FASTags நடைமுறை மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் கீழ், மக்கள் தங்கள் வாகனத்தில் ஃபாஸ்டாக் என்ற கருவியைப் பொருத்த வேண்டும். அதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். சுங்கச் சாவடிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்கேனர்கள் அதை ஸ்கேன் செய்யும் போது கணக்கில் இருந்து பணம் தானாகவே கழிக்கப்படும்.
Samayam Tamil fastag


இந்த முறை வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக இருந்தாலும், FASTagsல் உள்ள தொகையை சரிபார்ப்பதில் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். FASTagகளின் பேலன்ஸ் எவ்வளவு என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்பது கூட சிலருக்குத் தெரியாது.

FASTag ஆப்பில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதைச் சரிபார்க்க மொபைலில் FASTag மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும். பின்னர் உங்கள் பேலன்ஸ் இருப்பை சரிபார்க்கவும்.

முதலில் FASTag கணக்கு ஏதேனும் ஒரு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது உங்கள் வங்கிக் கணக்காக இருக்கலாம் அல்லது Paytm போன்ற வேலட்களாகவும் இருக்கலாம். இந்த சூழலில், உங்கள் FASTag கணக்கு இணைக்கப்பட்டுள்ள கணக்கிற்குச் சென்றால் அங்கு உங்களுடைய பேலன்ஸ் குறித்த தகவலைப் பெறுவீர்கள்.

FASTag கணக்கில் உள்ள பேலன்ஸ் நிலவரத்தை SMS மூலமாகவும் பார்க்கலாம். நீங்கள் FASTag சேவையைத் தேர்ந்தெடுத்திருந்தால், FASTag கணக்கிலிருந்து உங்கள் பணம் கழிக்கப்படும் போதெல்லாம், மொபைல் நம்பருக்கு SMS அனுப்பப்பட்டும். இந்த எஸ்எம்எஸ் மூலம் உங்கள் கணக்கு இருப்புத் தகவல்களையும் பெறுவீர்கள். இது தவிர, ரீசார்ஜ், டோல் கட்டணம் போன்ற தகவல்களும் கிடைக்கும்.

உங்களுடைய மொபைல் நம்பர் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI)இன் ப்ரீபெய்ட் வாலட்டில் பதிவு செய்யப்பட்டு, நீங்கள் ப்ரீபெய்டு FASTag வாடிக்கையாளராக இருந்தால், 8884333331 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமும் உங்கள் இருப்பைச் சரிபார்க்கலாம். இது 24 மணிநேரமும் செயல்படும் கட்டணமில்லா எண்ணாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்