ஆப்நகரம்

நீங்கள் இரு மடங்கு லாபம் சம்பாதிக்க சூப்பர் திட்டம்!

மத்திய அரசின் சிறப்பான சேமிப்புத் திட்டம்!

Samayam Tamil 16 Oct 2020, 10:40 am
இரு மடங்கு லாபம் தரும் கிசான் விகாஸ் பத்திர சேமிப்புத் திட்டத்தின் பயன்கள் என்ன, அதை எப்படி வாங்குவது, இதற்கான தகுதி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
Samayam Tamil how to double your money using this special post office scheme kisan vikas patra full details
நீங்கள் இரு மடங்கு லாபம் சம்பாதிக்க சூப்பர் திட்டம்!


கிசான் விகாஸ் பத்திரம்!

இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அப்படி, அஞ்சல் அலுவலகம் வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் இந்த கிசான் விகாஸ் பத்திரத் திட்டமும் ஒன்றாகும். நீண்ட கால அடிப்படையில் இது நல்ல வருவாய் தரும் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இதில் நீங்கள் முதலீடு செய்த பணத்தை 124 மாதங்களில் இரண்டு மடங்காக மாற்ற முடியும்.

என்ன தகுதி, எங்கே வாங்குவது?

இந்த கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது வந்தவர்கள் வாங்க முடியும். நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும்.

வட்டி எவ்வளவு?

இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 6.9 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. இதன்படி பார்த்தால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்.

எப்போது பணத்தை எடுக்கலாம்?

இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். நீங்கள் பத்திரம் வாங்கிய பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து உங்களால் பணத்தை எடுக்க முடியும்.

மற்ற சலுகைகள் என்ன?

நீங்கள் ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு இந்தப் பத்திரத்தை மாற்ற முடியும். அதேபோல, ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து மற்றொரு அஞ்சல் அலுவலகத்துக்கும் நீங்கள் பத்திரக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒரே ஒரு பாதகம் என்னவென்றால், இதின் கீழ் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இப்பத்திரத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம் Other Sources மூலம் ஈட்டிய வருமானமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்