ஆப்நகரம்

பணத்தை சூப்பரா சேமிப்பது எப்படி? 5 நச் டிப்ஸ்!

பணத்தை சிறப்பாக சேமிக்க ஐந்து நச் டிப்ஸ்.

Samayam Tamil 4 Dec 2021, 6:16 pm
எல்லோரும் கஷ்டப்பட்டுதான் பணத்தை சம்பாதிக்கின்றனர். ஆனால், மாத இறுதியில் கூட ஒன்றும் மிஞ்சாத நிலையில், சேமிப்புகள் பற்றி நினைத்துப்பார்க்க கூட பலருக்கும் நேரமில்லை. ஆனால், சேமிப்பு என்பது அனைவருக்கும் மிக அவசியம் என்கின்றனர் நிதி வல்லுநர்கள்.
Samayam Tamil cash


உலகம் முழுவதும் சேமிப்பை ஊக்குவிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், உங்கள் பணத்தை சரியாக சேமிக்க எப்படி திட்டமிடுவது என்பதை பார்க்கலாம்?

கவனம்


ஒவ்வொரு மாதமும் உங்கள் செலவுகளை கண்காணிப்பதுதான் சேமிப்புக்கான முதல் படி. செலவுகளை கண்கணிக்கும்போது தேவையில்லாத செலவுகள், வீண் செலவுகளை சரியாக கணிக்க முடியும். இதன் மூலம், வீண் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க முடியும்.

அடிமைத்தனம்

சிலருக்கு சில விஷயங்கள் மீது தீராத பற்று இருக்கும். இது ஒரு வகையில் அடிமைத்தனமாகவும் மாறிவிடும். உதாரணமாக மதுப்பழக்கத்துக்கு அடிமையாவது. இன்னும் ஒரு தரப்பினர் ஷாப்பிங் செய்வதற்கு அடிமையாக இருப்பார்கள். இந்தப் பழக்கங்களை கட்டுப்படுத்துவது அல்லது முழுவதுமாக விடுபடுவதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.

50 ரூபாய் சேமிப்பில் 50 லட்சம் லாபம்.. இப்படி முதலீடு செஞ்சா போதும்!
முதலில் சேமிப்பு

ஒவ்வொரு மாதமும் செலவு செய்துவிட்டு மீதமுள்ள தொகையை சேமிக்கும் பழக்கமே பரவலாக காணப்படுகிறது. ஆனால், முதலில் பணத்தை சேமித்துவிட்டு மீதமுள்ள தொகையை மட்டும் செலவு செய்யும்படி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இலக்கு

சேமிப்புக்கு இலக்குகள் இல்லாமல் பயணிப்பதை காட்டிலும் இலக்கு நிர்ணயிப்பதன் மூலம் ஒரு பாதையை ஏற்படுத்த முடியும். ஆக, சேமிப்புக்கு குறுகிய கால இலக்குகளும், நீண்டகால இலக்குகளும் நிர்ணயிப்பது சிறந்தது.

முதலீடு

நீங்கள் சேமிக்கும் பணம் வளர வேண்டுமெனில் அதை முதலீடு செய்யலாம். தங்கம், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், டெபாசிட் என பல்வேறு திட்டங்களில் சேமிப்பை முதலீடு செய்யலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்