ஆப்நகரம்

மாதம் ரூ.5,000 பென்சன்... வெறும் 7 ரூபாயில் கிடைக்கும்!

கடைசிக் காலத்தில் நிலையான பென்சன் கிடைக்க அருமையான திட்டம்!

Samayam Tamil 26 Feb 2021, 3:27 pm
நாள் ஒன்றுக்கு 7 ரூபாய் முதலீடு செய்து மாதத்துக்கு 5,000 ரூபாய் பென்சன் வாங்கும் சிறப்புத் திட்டம் ஒன்று உள்ளது. அதில் எப்படிப் பயன் பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil how to get 5000 rs pension by investing 7 rupees a day apy plan for you
மாதம் ரூ.5,000 பென்சன்... வெறும் 7 ரூபாயில் கிடைக்கும்!


அடல் பென்சன் யோஜனா!

அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மோடி அரசு 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

இணைவது எப்படி?

அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, உங்கள் வங்கிக் கணக்கு உள்ள வங்கியையே நீங்கள் பார்வையிட்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும், வங்கிக் கிளைகளிலும் கிடைக்கின்றன. நீங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம். அல்லது வங்கியில் நேரடியாகச் சென்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மொபைல் எண் தேவைப்படும். உங்களது ஆதார் அட்டையின் புகைப்பட நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் வரும்.

பயன்கள்!

அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்கு நீங்கள் பதிவுசெய்யும் வயதைப் பொறுத்து பங்களிக்க வேண்டிய தொகை இருக்கும். அடல் பென்சன் யோஜனா திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்சன் தரும் என்பது முக்கிய அம்சமாகும். பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இத்திட்டத்தில் இணைவது அதிக பலன்களைத் தரும்.

எவ்வளவு முதலீடு?

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் வருடத்துக்கு ரூ.60,000 பென்சன் வாங்க வேண்டுமென்றால் மாதத்துக்கு ரூ.210 சேமிக்க வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு 7 ரூபாய். இவ்வாறு சேமித்தால் மாதத்துக்கு ரூ.5,000 பென்சன் கிடைக்கும். 18 வயதிலேயே இணைந்து 60 வயது வரையில் சேமிக்க வேண்டும். ஒருவேளை 40ஆவது வயதில் இத்திட்டத்தில் இணைந்தால் ரூ.1,454 பங்களிப்பை வழங்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சமாக 5000 ரூபாயும் பென்சன் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்