ஆப்நகரம்

பயன்படுத்தப்பட்ட கார் வாங்கணுமா? லோன் வாங்குவது எப்படி?

பயன்படுத்தப்பட்ட கார் வாங்க விரும்புபவர்கள் அதற்கு மிக எளிதாகக் கடன் வாங்க முடியும். அதை எப்படி வாங்கலாம் என்று பார்க்கலாம்..

Samayam Tamil 5 Nov 2020, 7:50 pm
இந்தியாவில் புதிய வாகனங்களை விட பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த விலையில் தரமான நிலையில் இருக்கும் பழைய வாகனங்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எனவே ஒருபுறம் ஆட்டோமொபைல் துறை நலிந்துவந்தாலும், மறுபுறம் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவும் பண்டிகை சீசனில் சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வாகனக் கடன் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.
Samayam Tamil car loan


பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் புகழ்பெற்ற டீலர்களைத் தேடவும். ஆன்லைனிலோ அல்லது உங்கள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே விசாரித்து நல்ல டீலரைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஹெச்டிஎஃப்சி வங்கி ஆன்லைன் மார்க்கெட் தளத்தில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விவரங்களை வழங்குகிறது.

பயன்படுத்தப்பட்ட கார் கடனைப் பெறுவதற்கு சில வங்கிகளில் நீங்கள் முன் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஹெச்டிஎஃப்சி வங்கியில் 100 சதவீதக் கார் கடனும் வழங்கப்படுகிறது.

கார் கடன் வாங்குவதற்கு முன்னர் கார் மாடல், விலை மற்றும் வருமான விவரங்கள் போன்ற அடிப்படை தகவல்களைச் சரிபார்க்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாகவே கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது ஹெச்டிஎஃப்சி வங்கியை நேரடியாக அணுகியும் விண்ணப்பிக்கலாம்.

உங்களது வருமானம் போன்ற தகுதிகளுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும், ஈஎம்ஐ சலுகை எப்படி உள்ளது, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏதேனும் சலுகை உள்ளதா என்றெல்லாம் வங்கியிடம் ஆலோசிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்துக்கு உங்களது வருமானம், அடையாள ஆவணம், முகவரி போன்ற ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் இதற்கான கடன் வெறும் 10 நிமிடங்களில் ஒப்புதல் பெறப்படுகிறது. ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளராக இருந்தால் விண்ணப்பிப்பது இன்னும் எளிதாக இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்