ஆப்நகரம்

விலை உயர்வு கவலையா?... இலவசமாகவே எல்பிஜி சிலிண்டர் வாங்குவது எப்படி?

சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில் இலவசமாகவே சிலிண்டர்களை பெறுவது எப்படி?

Samayam Tamil 1 Jul 2020, 4:07 pm
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவிலும் சமையல் சிலிண்டர் விலை திருத்தி அறிவிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று சமையல் சிலிண்டர் விலையை திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை 3 ரூபாய் 50 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil எல்பிஜி சிலிண்டர்


டெல்லி, மும்பையில் சமையல் சிலிண்டர் விலை ரூ.594ஆக உள்ளது. சென்னையில் ரூ.610.50ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50ஆகவும் இருக்கிறது. இந்நிலையில், இலவசமாக சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி என பார்க்கலாம். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்காக ரூ.8,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு புதிய பயனாளிக்கும் ரூ.1,600 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் கடனாக சிலிண்டரை மீண்டும் நிரப்பிக்கொள்ளலாம் அல்லது கடனாக எல்பிஜி அடுப்பு பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் பயனை பெற, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த வயது வந்த பெண் இருக்க வேண்டும். ஏற்கெனவே சமையல் சிலிண்டர் இணைப்பு இல்லாதிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை பொறுத்தவரை, நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி மக்களுக்கு), அல்லது பஞ்சாயத்து தலைவர் (கிராமப்புற மக்களுக்கு) வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் அல்லது வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதிச் சான்றிதழ், முகவரி ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும். மேலும், சமையல் சிலிண்டர்களை வாட்சப் மூலமாக புக் செய்வதற்கு பாரத் பெட்ரோலியம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து வாட்சப்பில் 1800224344 என்ற எண் வாயிலாக எல்பிஜி சிலிண்டர்களை புக் செய்யலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்