ஆப்நகரம்

இலவச சிலிண்டர் வாங்குவது எப்படி? இப்படி அப்ளை பண்ணலாம்!

மத்திய அரசிடமிருந்து இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 20 Nov 2021, 9:27 pm
இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிறையப் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
Samayam Tamil lpg


2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அரசின் இந்த இலவச சிலிண்டர் இணைப்பை வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்...

உஜ்வாலா திட்டத்துக்கான விண்ணப்பத்தை நிரப்பி அருகிலுள்ள எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகஸ்தரிடம் வழங்க வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்ணின் பெயர், முகவரி, ஜன் தன் வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் நம்பர் போன்றவற்றை நிரப்ப வேண்டும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். சிலிண்டர் இணைப்புக்கு ஈஎம்ஐ வசதியைத் தேர்ந்தெடுத்தால் அதற்கான தொகை சிலிண்டர் மானியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் கழிக்கப்படும்.

சிலிண்டர் இணைப்பு தரும்போது 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரும் கேஸ் அடுப்பும் வழங்கப்படும். இதன் விலை ரூ.3,200. இதில் அரசிடமிருந்து 1600 ரூபாய் மானியம் கிடைக்கும். எஞ்சிய தொகை சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும். இத்தொகை மானியத்திலிருந்து பின்னர் கழிக்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்