ஆப்நகரம்

வீட்டுக் கடன் வேணுமா? உடனடியாக வாங்குவது எப்படி?

எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக சில நிமிடங்களில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 5 Oct 2020, 5:17 pm
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஏதுவாக ஆன்லைன் மூலம் எளிதில் கடன் வாங்கும் வசதியை எஸ்பிஐ கொண்டுவந்துள்ளது. இவ்வங்கியின் பிரத்தியேகமான மொபைல் செயலியான யோனோ ஆப் மூலமாக வெறும் மூன்றே கிளிக்குகளில் வீட்டுக் கடன் பெறுவதற்கான ஒப்புதல் பெறலாம்.
Samayam Tamil home loan


எஸ்பிஐ ஹோம் டாப் அப் கடன் பெற முதலில் நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள பிளே ஸ்டோர் மூலம் எஸ்பிஐ ஆப் பதிவிறக்கம் செய்து உள்நுழைய வேண்டும். யோனோ ஆப்பில் உள்நுழைந்த பிறகு மேல் பக்கம் உள்ள பேனரில் வீட்டுக் கடன் வசதி இருக்கும். அதை கிளிக் செய்து, வங்கியில் கடன் வாங்க விரும்பும் தொகை, கால வரம்பு போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதைப் பதிவுசெய்தவுடன் உங்களது விண்ணப்பப் படிவம் வங்கியின் ஒப்புதலுக்குச் செல்லும். வங்கி தரப்பிலிருந்து இந்த விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட உடன் உங்களது வங்கிக் கணக்கில் கடன் தொகை உடனடியாக டெபாசிட் செய்யப்படும்.

வட்டி தள்ளுபடி: கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு லாபமா?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களுக்கு கடன் கிடைக்கிறது. அதன் செயலாக்கக் கட்டணங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடன் தொகை சரியான நேரத்தில் செலுத்தப்பட்டுவிட்டால், வட்டி வசூலிக்கப்படாது. எஸ்பிஐ வாடிக்கையாளர் இந்தக் கடனை 30 ஆண்டுகளுக்கு எடுக்கலாம். இந்த வீட்டுக் கடனுக்கு என்.ஆர்.ஐ. மக்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 70 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வங்கிக்குச் செல்லாமலேயே மிகச் சுலபமாக இதில் கடன் வாங்க முடிகிறது. இந்த வீட்டுக் கடனுக்கு வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்