ஆப்நகரம்

ஆதார் கார்டு தொலைஞ்சிருச்சா? புது கார்டு வீடு தேடி வரும்!

ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து புதிய கார்டு வாங்கலாம்.

Samayam Tamil 14 Aug 2021, 4:38 pm
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகிவிட்டது. ஆதார் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. தனிமனிதனின் மிக முக்கியமான ஆவணமாக உள்ள இந்த ஆதார் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
Samayam Tamil aadhaar


ஆதார் கார்டை UIDAI அமைப்புதான் வழங்குகிறது. ஒவ்வொரு நபருக்கும் 12 இலக்கங்கள் அடங்கிய ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் எண் வங்கிக் கணக்கு, மொபைல் நம்பர், பான் எண், பிஎஃப் எண் என அனைத்து ஆவணங்களிலும் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் சலுகைகளைப் பெறமுடியாது என்பதோடு பிரச்சினைகளும் சந்திக்க நேரிடும்.

ஒருவேளை உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் கவலை வேண்டாம். ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து வாங்கிவிடலாம். ஆதார் பிவிசி கார்டு அல்லது பிளாஸ்டிக் ஆதார் காடு வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

ஆதார் அமைப்பின் https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint.php என்ற வெப்சைட்டில் சென்று உங்களது ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும்.

செக்கியூரிட்டு கோட் மூலமாக ஆதார் விவரங்களை சரிபார்த்துவிட்டு, உங்களது ஆதார் கார்டு மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று குறிப்பிடவும். கொடுக்கப்பட்ட பாக்ஸில் டிக் செய்தாலே போதும்.

பின்னர் send OTP கொடுத்தால் உங்களது மொபைல் நம்பருக்கு OTP வரும். அதைவிட்ட பின்னர் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பின்னர் ஆதார் கார்டு ஆர்டர் செய்யப்பட்டு உங்களது முகவரிக்கே அனுப்பு வைக்கப்படும். ஆதார் கார்டு வந்துசேர இரண்டு வாரங்கள் வரை ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்