ஆப்நகரம்

இன்று முதல் புதிய IFSC code... வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பழைய IFSC code செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Feb 2021, 5:58 pm
அலகாபாத் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? அப்படியென்றால் உங்களுக்கான செய்திதான் இது. பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அலகாபாத் வங்கியின் IFSC code அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. பழைய IFSC code வைத்து இனி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியன் பேங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய IFSC code பெறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil bank


இந்தியன் வங்கியின் www.indianbank.in/amalgamation என்ற முகவரியில் லாகின் செய்து, பழைய IFSC code டைப் செய்து புதிய IFSC code மாற்றிக்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாடிக்கையாளர்கள் புதிய IFSC code பெற முடியும். IFSC OLD IFSC என டைப் செய்து 9266801962 என்ற நம்பருக்கு உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால் புதிய IFSC code பெற முடியும்.

ATM: பணம் கைக்கு வரலனா ஒரு நாளுக்கு 100 ரூபாய்!
இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு விஷயங்கள் மாறியுள்ளன.

1. அலகாபாத் வங்கியின் IFSC code
2. ’emPower’ என்ற மொபைல் பேங்கிங் ஆப் இப்போது ‘IndOASIS’ என்று மாறியுள்ளது.
3. நெட் பேங்கிங்
4. செக் புக் மற்றும் பாஸ் புக்

மேற்கண்ட விவரங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தனது ட்விட்டர் பதிவு மூலமாக இந்தியன் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்