ஆப்நகரம்

உங்க அக்கவுண்டுக்கு ரூ.2,000 வந்திருச்சா? வரலனா உடனே இதை செய்யுங்க!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2000 நிதியுதவி டெபாசிட் செய்யப்படும் நிலையில், அதில் எப்படி இணைவது மற்றும் அதன் விவரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

Samayam Tamil 28 Sep 2020, 7:48 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil pm kissan


இத்திட்டத்துக்கான இரண்டாவது தவணைத் தொகையை மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவுவைத்தது. அடுத்தகட்ட தவணைத் தொகை இந்த டிசம்பர் மாதத்தில் டெபாசிட் செய்யப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் அதன் நிலவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம். அப்படி இன்னும் விண்ணப்பிக்காமல் இருந்தால் உடனடியாக விண்ணப்பித்தால் இத்திட்டத்தின் கீழ் அவர்கள் நிதியுதவி பெறலாம்.

செம சூப்பரான சேமிப்புத் திட்டம்... எப்படி இணைவது, என்ன பயன்?

பிஎம் கிசான் நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளது. பி.எம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் ’Farmers Corner’ என்ற வசதியில் ’New Farmer Registration’ என்பதை கிளிக் செய்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

டிஜிட்டல் ஆதார் டவுன்லோடு செய்வது எப்படி?

உங்களது 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறீயீட்டைப் பதிவு செய்வதன் மூலம் உங்களது ஆன்லைன் பதிவு சமர்ப்பிக்கப்படும். குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன தன் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற ஆவணங்கள் இத்திட்டத்தில் இணைய தேவைப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்