ஆப்நகரம்

SBI Kisan Credit Card: எப்படி வாங்குவது, என்னென்ன ஆவணங்கள் தேவை?

வட்டி எவ்வளவு, என்ன பயன்?

Samayam Tamil 24 Sep 2020, 1:47 pm
கிசான் கிரெடிட் கார்டு (KCC) என்பது விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். இதில் விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் கடன் பெறலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) போன்ற பல்வேறு வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அனைத்து விவசாயிகளும் இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் வாங்கிப் பயன்பெறமுடியும். இதை வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil how to get sbi kisan credit card here is the full details
SBI Kisan Credit Card: எப்படி வாங்குவது, என்னென்ன ஆவணங்கள் தேவை?


என்னென்ன ஆவணங்கள் தேவை?

கிசான் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு நில ஆவணங்கள் மற்றும் பயிர் விவரங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுபோக நில ஆவணத்தின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்துடன் சேர்த்து, நில ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு பெற வங்கிகளிலேயே சுலபமாக விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டுகள் கிடைக்கும். இணையதளத்தில் கிசான் கார்டுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்த பின்னர் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வங்கி கேட்கும் ஆவணங்களுடன் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். கடன் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு கிசான் கிரெடிட் கார்டு அனுப்பப்படும்.

சில முக்கிய அம்சங்கள்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கேஒய்சி விதிமுறைக்கு விண்ணப்ப படிவத்தில் முறையாக நிரப்பப்பட்ட, அடையாள ஆதாரம் மற்றும் முகவரி ஆதாரம் தேவைப்படும். ரூ.3 லட்சம் வரை கடன் தொகைக்கு 2 சதவீத வட்டிச் சலுகை கிடைக்கிறது. உடனடியாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 சதவீத கூடுதல் வட்டிச் சலுகை கிடைக்கிறது. சாகுபடி செலவு, அறுவடைக்கு பிந்தைய செலவுகள் மற்றும் பண்ணை பராமரிப்பு செலவு ஆகியவற்றின் அடிப்படையில் முதல் ஆண்டிற்கான கடனின் அளவு மதிப்பிடப்படுகிறது. அடுத்தடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆகும் செலவுகள் அடிப்படையில் கடன் அனுமதிக்கப்படும். 7 சதவீத வட்டி ஒரு வருடம் அல்லது திருப்பிச் செலுத்த வேண்டிய தேதி வரை, எது முந்தையது எனக் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்