ஆப்நகரம்

வங்கிக் கணக்கு ஈசியா தொடங்குவது எப்படி?

ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே வங்கிக் கணக்கு திறப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 7 Jun 2023, 10:53 am
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்திருப்பது மிகவும் அவசியம். மக்கள் தங்களுடைய பணத்தை சேமித்து வைக்க வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர். வங்கிக் கணக்கு வைத்திருப்பதில் நிறைய பயன்கள் உள்ளன. ஒருவேளை உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையென்றால் புதிதாக சேமிப்புக் கணக்கு திறக்கலாம். முன்பெல்லாம் வங்கிக் கிளைக்குச் சென்றுதான் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். ஆனால் இப்போது ஆன்லைன் மூலமாகவே சேமிப்புக் கணக்கு தொடங்கலாம்.
Samayam Tamil bank account


ஆன்லைனில் பேங்க் அக்கவுண்ட் திறப்பது எப்படி?

  • நீங்கள் எந்த வங்கியில் கணக்கு தொடங்க விரும்புகிறீர்களோ அந்த வங்கியின் இணையதளத்திற்குச் செல்லவும்.
  • அதில் சேமிப்புக் கணக்கைத் திறக்க ஒரு விருப்பம் இருக்கும். அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பிறகு கணக்கு தொடங்குவதற்குத் தேவையான தனிப்பட்ட விவரங்கள் உங்களிடம் கேட்கப்படும்.
  • ஆதார், பான் கார்டு உள்ளிட்ட உங்களுடைய KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
  • நீங்கள் சேமிப்புக் கணக்கில் அனைத்து விவரங்களையும் கொடுத்த பிறகு, வங்கிக்கு ஏற்ப குறைந்தபட்ச இருப்புத் தொகையையும் டெபாசிட் செய்ய வேண்டும்.
  • ஆன்லைனில் உங்களுக்கு வங்கி கணக்கு எண் ஒதுக்கப்படும்.

சேமிப்புக் கணக்கின் நன்மைகள் என்ன?

சேமிப்பு கணக்கு பாஸ்புக் மற்றும் காசோலை புத்தக வசதியுடன் வருகிறது. உங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கலாம் மற்றும் செலுத்தலாம். உங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ஆட்டோ டெபிட் மற்றும் ஆட்டோ கிரெடிட் வசதியைப் பெறுவீர்கள். சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். வங்கிகள் சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகின்றன.

மற்ற அம்சங்கள்!

ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு குறைந்த வட்டி விகிதத்தைப் பெறுகிறது. ஆனால் வாடிக்கையாளருக்கு மாதாந்திர பணம் எடுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு எந்த நேரத்திலும் பணத்தை எடுக்க சுதந்திரம் அளிக்கிறது. உங்களுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பில் செலுத்த முடியும். எஸ்எம்எஸ் வங்கி சேவைகளின் ஒரு பகுதியாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் பரிவர்த்தனை எச்சரிக்கைகளை அனுப்புகின்றன.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்