ஆப்நகரம்

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: ஆன்லைனில் பணம் அனுப்புவது எப்படி?

ஆன்லைன் மூலமாகவே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் பணம் போடுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 12 Jan 2021, 9:05 pm
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம். இதில், செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சிறு சேமிப்புத் திட்டத்திலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது.
Samayam Tamil ssy


21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை மூடி விடலாம். செல்வ மகள் சேமிப்புக் கணக்கை துவக்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. வருடந்தோறும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம்.

கிரெடிட் கார்டு வாங்குபவர்கள் கவனத்துக்கு!

இத்திட்டத்தில் ஆன்லைன் மூலமாகப் பணம் அனுப்புவதற்கு நீங்கள் டாக் பே செயலியைப் பயன்படுத்தலாம். இந்திய தபால் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இணைந்து இந்தப் புதிய செயலியை சமீபத்தில் தொடங்கியது. டாக் பே செயலியில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியோடு, கடைகளில் QR குறியீடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். மற்ற கட்டணங்களையும் இந்த மொபைல் ஆப் மூலம் செலுத்த முடியும். உங்களது சேமிப்புக் கணக்கை இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.

PF: பேங்க் அக்கவுண்ட் அப்டேட் செய்வது எப்படி?

இச்செயலியில் DOP வசதியின் கீழ் சுகன்யா சம்ரிதி யோஜனா அக்கவுண்ட் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் செல்வ மகள் சேமிப்புக் கணக்கு எண் மற்றும் கஸ்டமர் ஐடி பதிவிட வேண்டும். உங்களது திட்டத்துக்கான பணம் அனுப்பும் காலம் மற்றும் தொகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறாக நீங்கள் டேக் பே செயலி மூலமாகப் பணம் அனுப்ப முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்