ஆப்நகரம்

பிஎஃப் பணம்... வங்கிக் கணக்கை அப்டேட் செய்ய ஈசி வழி!

ஆன்லைன் மூலமாக பிஎஃப் கணக்கை அப்டேட் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 21 Jul 2021, 4:01 pm
PF தொடர்பான சேவைகள் மற்றும் அப்டேட்களுக்கு EPFO அமைப்பின் வெப்சைட்டில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிஎஃப் கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு போன்ற விவரங்களையும் பார்க்கலாம். பிஎஃப் பணம் சரியாக வரவேண்டுமென்றால் மிக முக்கியமான விஷயம், வங்கிக் கணக்கு விவரம் சரியாக இருக்க வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் பிஎஃப் பணம் வருவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே பிஎஃப் சந்தாதார்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.
Samayam Tamil pf


பிஎஃப் கணக்கில் வங்கிக் கணக்கு விவரங்களை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் அப்டேட் செய்ய முடியும்.

அதற்கு பிஎஃப் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில்செல்ல வேண்டும். (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/)

உங்களது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழைய வேண்டும்.

'Menu' செக்சனில் சென்று 'Manage' என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் வரும் டிராப் டவுன் பாக்ஸில் KYC என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும். அதில் 'Bank' என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்தால் Document number, Name, IFSC code போன்ற விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

இதில் உங்களது சரியான வங்கிக் கணக்கு விவரங்களை அப்டேட் செய்து save கொடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கை ஒப்புதலுக்காக அனுப்பப்படும். உங்களது நிறுவனம் இதை சரிபார்த்தவுடன் ஒப்புதல் கிடைத்துவிடும். இதற்கான உறுதிப்படுத்துதல் எஸ்.எம்.எஸ். உங்களுக்கு அனுப்பப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்