ஆப்நகரம்

பேங்க் பேலன்ஸ் எவ்வளவு? மிஸ்டு கால் கொடுத்தாலே தெரியும்!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் பார்ப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 12 Jun 2022, 1:34 pm
நம் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு வைத்திருப்போம். நிறையப் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு கூட வைத்திருப்பார்கள். அந்த வங்கிக் கணக்கில் நாம் வைத்திருக்கும் பணம் எவ்வளவு என்று தெரிந்துகொள்வதற்கு முன்பெல்லாம் வங்கிக் கிளைக்கு அலைய வேண்டியிருக்கும். ஆனால் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே பேலன்ஸ் பார்க்க நிறைய வசதிகள் வந்துவிட்டன.
Samayam Tamil missed call


பேங்க் பேலன்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளை இப்போது மொபைல் போன் மூலமாகவே பெறலாம். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அடிக்கட் தங்களது பேலன்ஸ் எவ்வளவு என்று பார்ப்பார்கள். அதற்கு மிக எளிமையான வழி உள்ளது. ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தாலே போதும். பேலன்ஸ் உள்ளிட்ட விவரங்கள் உங்களுடைய மொபைல் போனுக்கு SMS மூலமாக அனுப்பப்படும்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்களுடைய பேங்க் பேலன்ஸ் பார்ப்பதற்கு 09223008586 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ரிங் கொடுத்தவுடனேயே அதுவே கட் ஆகிவிடும். உடனடியாக உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு இவ்வாறு SMS வரும்.

Avl Bal in Your A/c XXXXXXXXXXX04222 is INR Cr 1461.95 as on 12-06-2022 10:10:59 AM IST .

இதேபோல, SMS அனுப்புவதன் மூலம் உங்களுடைய பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்று தெரிந்துகொள்வதற்கு உங்களுடைய மொபைல் நம்பரில் இருந்து UBAL என டைப் செய்து 09223008486 என்ற நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

மினி ஸ்டேட்மெண்ட் பார்ப்பதற்கு UMNS என டைப் செய்து அனுப்பினால் போதும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்